உ.பி. சம்பவம் கண்டித்து விருத்தாசலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

உ.பி. சம்பவம் கண்டித்து விருத்தாசலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
X
விருத்தாசலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உ.பி. சம்பவம் கண்டித்து விருத்தாசலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து அதை திரும்ப பெற வலியுறுத்தி போராடிய விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் கார் ஏற்றி 8 பேரை படுகொலை செய்ததை கண்டித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.தொகுதி செயலாளர் ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட பொது செயலாளர் ரஹமத்துல்லா, மாவட்ட பொருளாளர் முஹம்மது ஹனிபா,அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது ரபீக்,தொகுதி தலைவர் அப்துல் ரஹீம்,நகர செயலாளர் சாதிக் பாஷா,ஆகியோர் முன்னிலை வகித்தனர்,குறிஞ்சிப்பாடி தொகுதி தலைவர் அமானுல்லா கண்டன உரை நிகழ்த்தினார்,நகர தலைவர் ஷாகுல் ஹமீது நன்றி கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!