விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 15 வயது முதல் 18 வயது வரை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இத்தடுப்பூசி முகாமை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அப்போது,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசுகையில் தமிழ்நாட்டில் பொதுமக்களும், தொழிலாளிகளும் மாணவச் செல்வங்களும் எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டாலும் அதனை தீர்க்க கூடிய முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர், முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு நாளும் ஒரு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் மழையில் சென்னை தத்தளித்த போது இரவு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து இரவு நேரத்தில் மழை வெள்ள பாதிப்புகளை சுற்றிப்பார்த்து மக்களை காப்பாற்றினார்.
மாணவச் செல்வங்கள் அத்தனை பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு நீண்ட காலம் வாழ வேண்டும்,முதலமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். ஆர். ராதா கிருஷ்ணன்,மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார்,வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார், நகர தி.மு.க. செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள்குமார்,நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ்,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன்,ஆசிரியர் பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu