விருத்தாசலம் அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு மரக்கன்று விழா

விருத்தாசலம் அருகே  குடியரசு தினத்தை முன்னிட்டு மரக்கன்று விழா
X

விருத்தாசலம் அருகே குடியரசு தினவிழாவில் ஒன்றிய நடுநிலைப்பள்ளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

விருத்தாசலம் அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தில் 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 5 பவுண்டேசன் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு 5 பவுண்டேஷன் தலைவர் வீரசெல்வன் தலைமை தாங்கினார்.5 பவுண்டேஷன் செயலாளர் நெப்போலியன்,துணைத் தலைவர் அசோகன் பொருளாளர் நிதிஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆலிச்சிக்குடி ஊராட்சி நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் கீதா,உதவி ஆசிரியர் மகாலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.மரக்கன்று நடும் விழாவில் 5 பவுண்டேஷன் சார்பில் சந்தோஷ்குமார், சிவராஜன், திருவாசகம் ரமேஷ், விஜயன் மற்றும் தூய்மை பணியாளர் தனகொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!