விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் காணிக்கை

விருத்தாசலம்  கொளஞ்சியப்பர் கோயிலில் ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் காணிக்கை
X

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் எண்ணப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் திருக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.இதில் ஐந்து லட்சத்து 65 ஆயிரத்து 672 ரூபாய் பணமும்,950 கிராம் வெள்ளியும்,ஏழரை பவுன் நகையும்,பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

இந்து அறநிலையத் துறையின் உதவி ஆய்வாளர் பரணிதரன் மேற்பார்வையில் நடைபெற்ற இப்பணியில் கொளஞ்சியப்பர் திருக்கோவில் செயல் அலுவலர் மாலா,விருத்தாசலம் ஆய்வாளர் கோவிந்தசாமி,மற்றும் திருக்கோவில் ஊழியர்கள்,வங்கி ஊழியர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்...

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்