விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மான நகலை கோட்டாட்சியரிடம் அளித்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க. 4 ஒன்றியக் குழு உறுப்பினர்களும் தி.மு.க. 5 ஒன்றிய குழு உறுப்பினர்களும் பா.ம.க. 4 ஒன்றிய குழு உறுப்பினர்களும் சுயேட்சை 3 பா.ஜ.க. - 2 தே.மு.தி.க. 1 உள்பட மொத்தம் 19 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
பா.ம.க., சுயேட்சை, பா.ஜ.க. உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த செல்லதுரையும், ஒன்றியக்குழு துணைத் தலைவராக பூங்கோதையும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது ஒன்றிய குழு தலைவர் (சேர்மன்)செல்லத்துரை சில தினங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்து விட்டார்.
இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை ஆகிய இருவரும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு நிதிகளை பிரித்துக் கொடுக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதை கண்டித்து,ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் செல்லதுரை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றவும்,ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தை கூட்ட கோரி,ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கோதை தலைமையில் 14 கவுன்சிலர்கள் வந்திருந்தனர்.
'பின்பு அதிகாரிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மான கூட்டத்தை கூட்ட முற்படாததால் ஆத்திரமடைந்த ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வெளியேறி கூட்டாக வாகனத்தில் சென்று சார் ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அதன் பிறகு கோட்டாட்சியர் ராம் குமாரை ஒன்றியக் குழு உறுப்பினர்கள் 15 பேர் சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தை உடனடியாக கூட்ட வலியுறுத்தி மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu