விருத்தாசலம் சாலையில் தேங்கிய மழைநீர்: நாம் தமிழர் கட்சியினர் நூதன போராட்டம்

விருத்தாசலம் சாலையில் தேங்கிய மழைநீர்: நாம் தமிழர் கட்சியினர் நூதன போராட்டம்
X

விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

தேங்கி நிற்கும் நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் நூதன போராட்டம்

விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பங்களா தெருவில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையில் தற்போது பெய்த கன மழையில் குளம் போல் தேங்கியுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாலையில் தேங்கி நிற்கும் நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமை தாங்கினார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், கிழக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை விஜய் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் தொட்டிக்குப்பம் கிளை பொறுப்பாளர் கவிஞர் விக்னேஷ் சரவணன், செல்வம் மோகன், ஆதி, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!