விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருத்தாசலத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடியரசு தின பேரணியில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியை அனுமதிக்காத மத்திய மோடி அரசை கண்டித்தும், வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரியும் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்,நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விருத்தாசலம் வட்ட செயலாளர் ராவண ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பட்டுசாமி,மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விருத்தாசலம் நகர செயலாளர் விஜய பாண்டியன்,இந்திய மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அறிவழகி மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!