விருத்தாசலத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
விருத்தாசலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் உத்தரவின்பேரில்,கஞ்சா தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரேவதி அவர்கள் தலைமையில்,பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது விருத்தாசலம் அடுத்த மாத்தூர் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் ஜாபர் சாதிக்(35) விருத்தாசலம் ஆலடி ரோடு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபொழுது வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் வாகனத்தில் மறைந்து வைத்திருந்த சுமார் 20 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை மற்றும் இருசக்கர வாகனத்தை விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொண்டுவந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu