பெரியாரின் 143-வது பிறந்தநாள்: அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பெரியாரின் 143-வது பிறந்தநாள்: அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை
X

பெரியார் சிலைக்கு அனைத்து கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அமைந்திருக்கும் பெரியாரின் சிலைக்கு அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியாரின் 143 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அமைந்துள்ள பெரியார் திருவுருவச்சிலைக்கு அனைத்து கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் திராவிட கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திராவிட கழகம், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மறுமலர்ச்சி திராவிட கழகம், இந்திய முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!