மதிப்பெண் குளறுபடி செய்திருப்பதாக கூறி தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

மதிப்பெண் குளறுபடி செய்திருப்பதாக கூறி தனியார் பள்ளியை  முற்றுகையிட்ட பெற்றோர்
X

மதிப்பெண் குளறுபடி செய்திருப்பதாக கூறி தனியார் பள்ளியை   முற்றுகையிட்ட பெற்றோர்

விருத்தாசலம் தனியார் பள்ளியில் மதிப்பெண் குளறுபடி செய்திருப்பதாக கூறி பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கடலூர் மாவட்டம்,விருத்தாசலத்தில் உள்ள ஜெயப்பிரியா தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 200க்கும் மேற்பட்ட 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். பள்ளி நிர்வாகம் வருடத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் வசூலித்து வந்தது.

இந்நிலையில்,இவ்வருட பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில்,நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்கள் வழங்கியுள்ளதாகவும், சரியாகப் படிக்காத மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கியதாகவும், மேலும் படிக்காத மாணவர்கள் தரப்பில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு பள்ளி நிர்வாகம் அதிக மதிப்பெண் வழங்கியதாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டி இன்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிபிஎஸ்சி போர்டு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் குளறுபடி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil