விருத்தாசலத்தில் சத்துணவு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
விருத்தாசலத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் துண்டு விரித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, புவனகிரி, காட்டுமன்னார்குடி உள்ளிட்ட ஒன்றியங்களில் சத்துணவுத் திட்டத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கவேண்டிய ஓய்வுகால பணப்பலன் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை சிறப்பு சேம நலநிதி பொது சேமநல நிதி இறந்த பணியாளர்கள் குடும்பங்களுக்கு குடும்ப நல நீதி உள்ளிட்ட நிதிகள் வழங்காததை கண்டித்து விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்,மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
பின்பு, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் கூட்டாக துண்டை விரித்து பிடித்து சாலைகளில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu