கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
X

நல்லூர் ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோட்டாட்சியரிடம் கொடுக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய சேர்மன் மீது விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க. 6 ஒன்றியக் குழு உறுப்பினர்களும், தி.மு.க. 7 ஒன்றிய குழு உறுப்பினர்களும், பா.ம.க. 2 ஒன்றிய குழு உறுப்பினர்களும் சுயேட்சையாக 5 ஒன்றிய குழு உறுப்பினர்களும் , வி.சி.க.1, என மொத்தம் 21 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது வெற்றி பெற்றனர் .

இந்நிலையில்,அ.தி.மு..க மற்றும் சுயேட்சை உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஒன்றிய சேர்மனாக பா.ம.க கவைச் சேர்ந்த செல்வி ஆடியபாதம் தலைவராகவும், அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சிமேரி தங்கராசன் ஒன்றிய குழு துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டனர்.

ஒன்றிய குழு தலைவர் செல்வி ஆடியபாதம் ,வட்டார வளர்ச்சி அலுவலர் இருவரும் ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக அரசு நிதிகளை பிரித்துக் கொடுக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதை கண்டித்து, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் செல்வி ஆடியபாதம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றவும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தை கூட்ட கோரி வேப்பூர் கவுன்சிலர் முத்துக்கண்ணு தலைமையில் 15 கவுன்சிலர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தை உடனடியாக கூட்ட வலியுறுத்தி கோட்டாட்சியர் ராம்குமாரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!