கணவனை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்க உத்திரவாதம் அளித்த அமைச்சர்

கணவனை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்க உத்திரவாதம் அளித்த அமைச்சர்
X
கணவனை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்த அமைச்சர்.

கணவனை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்த அமைச்சர் சி.வெ.கணேசன்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புலிவளம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பகுத்தறிவு(26)இவரது கணவர் வீரபாண்டியன்(31)இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலகுறைவால் இறந்துவிட்ட நிலையில் கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளோடு யாருடைய ஆதரவும் இல்லாமால் புலிவளம் கிராமத்தில் வசித்து வருகிறார், இந்த நிலையில் பகுத்தறிவு தனது இரண்டு பிள்ளைகளுடன் சென்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசனை அவரது இல்லத்தில் சந்தித்து நிவாரணம் கேட்டு மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அரிசி,மளிகை பொருட்கள் மற்றும் நிவாரணமாக ரூபாய் 2ஆயிரம் வழங்கி அரசு வழி சம்மந்தமாக எவ்வித உதவியும் செய்து தருவேன் என்று உறுதியளித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!