விருத்தாசலம் அருகே வீட்டில் பிடித்த தீயை உடனே அணைத்த தீயணைப்பு வீரர்கள்

விருத்தாசலம் அருகே வீட்டில் பிடித்த தீயை உடனே அணைத்த தீயணைப்பு வீரர்கள்
X

விருத்தாசலம் அருகே வீட்டில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

விருத்தாசலம் அருகே வீட்டில் கியாஸ் சிலிண்டர் மூலம் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து அணைத்தனர்.

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட வேப்பூர் கிராமத்தில் புதிய காலனி பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி மகன் இளையராஜா. இவரது வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ பிடித்து எரிந்தது,இது குறித்து வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து,தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்,தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்ததால் உயிர் சேதம்,பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!