விருத்தாசலம் மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆர்ப்பாட்டம்
X

விருத்தாசலம் மங்கலம் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருத்தாசலம் மங்கலம் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் இந்திய குடியரசு கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளர் மங்கா பிள்ளை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சுகாதார நிலையத்திற்கு வராமலேயே, வாட்சப் மூலம் பணியாளர்களை வேலை வாங்கும் வட்டார மருத்துவ அலுவலரைக் கண்டித்தும்,மேம்படுத்தப்பட்ட மருத்துவ சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த காலங்களில் குறைந்த எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருந்தபோது, பிரசவம்,குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் மாவட்டத்தில் சிறந்த விளங்கிய இந்த மருத்துவமனை தற்போது 3 ஆண் மருத்துவர்கள், 2 பெண் மருத்துவர்கள் பணியாற்றும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகாலமாக சரிவர கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்காமல் மருத்துவர் இல்லையென்று காரணம் கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி பிரமுகர் கோபுபிள்ளை,அ.தி.மு.க., நிர்வாகிகள் பாலமுருகன், அப்பாதுரை, ராதாகிருஷ்ணன், பா.ஜ.க., மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், கல்கிராஜ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். எம்.இக்பால், திருச்சி ஹமீது, வர்த்தகர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தாமோதரன், புருஷோத்தமன், பா.ம.க. நகர செயலாளர் ராமகிருஷ்ணன், த.மு.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் அசன் முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் ராம்குமார், இந்திய குடியரசுக் கட்சி நகர செயலாளர் ராமானுஜம், தலைவர் கதிர்காமன், ம.தி.மு.க.நகர செயலாளர் சுந்தர்ராஜன், தே.மு.தி.க. நகர செயலாளர் முத்து, பா.ம.க.மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்பட அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்