எஸ்கேப் ஆக நினைத்த காதலன், மகளிர் போலீசார் முன்னிலையில் திருமணம்

எஸ்கேப் ஆக நினைத்த காதலன், மகளிர் போலீசார் முன்னிலையில் திருமணம்
X
விருத்தாசலம் மகளிர் போலீசார் முன்னிலையில் காதலித்து ஏமாற்றிய, காதலனை, காதலி திருமணம் செய்து காண்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னாத்துக்குறிச்சியை சேர்ந்த சுப்ரமணியன் மகள் சுகுணா(26) இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியாராக பணிபுரிந்து வருகிறார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் பெரியாத்துக்குறிச்சியை சேர்ந்த மாயவேல் மகன் மணிவேல்(27)தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.


இருவரும் பள்ளிப்பருவத்திலிருந்து சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வேலை தேடி சென்னையில் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா காலம் என்பதால்,விடுமுறையில் இருவரும் வேலை இல்லாமல் வீடு திரும்பினர். தற்பொழுது மணிவேல் என்பவருக்கு அவரது சொந்தத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்ய இருப்பதை அறிந்து சுகுணா,விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் மணிவேல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் மணிவேலுவிடம் விசாரணை மேற்கொண்டு சமாதானம் செய்துவைத்து,

காவல் நிலையத்தின் அருகே உள்ள வண்ணமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கு அழைத்து வந்தனர் திருமணத்துக்கு மறுத்த மணிவேல் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போராடி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!