விருத்தாசலம் தனியார் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு ஒத்திகை

விருத்தாசலம் தனியார் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு ஒத்திகை
X
விருத்தாசலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது

விருத்தாசலத்தில், பெண்ணாடம் சாலையில் உள்ள எழில் மற்றும் ஜங்ஷன் சாலையில் பி.பி.எஸ். ஆகிய தனியார் மருத்துவமனைகளில் மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இங்கு விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில், நிலைய அலுவலர் மணி தலைமையில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. மருத்துவமனையில் திடீரென மின்கசிவு போன்ற இடர்பாடுகளால் ஏற்படும் தீயை எவ்வாறு அணைப்பது என மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!