விருத்தாசலம் அருகே தந்தை கொலை- மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது
விருத்தாசலம் அருகே கொலை செய்யப்பட்ட மகாலிங்கம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் உள்ள மூலக்காடு,ராமதாஸ் நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் வயது 63 கூலி தொழிலாளி, இவரது மகன் அறிவுச்சுடர் வயது 35 இவர் சுமார் பத்தாண்டுகளுக்கு மேல் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். இவரை இரவு நேரத்தில் சங்கிலியால் கட்டி வைத்து இருப்பது வழக்கமாம்.
இந்நிலையில் நேற்று இரவு மகாலிங்கம் கவன குறைவு காரணமாக அறிவுச்சுடரை சங்கிலியால் கட்டி வைக்க மறந்துவிட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மகன் அறிவுச்சுடர் மரக்கட்டையால் மகாலிங்கத்தை கடுமையாக தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த வந்த விருத்தாசலம் காவல்துறையினர் இறந்த மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அறிவுச்சுடரை கைது செய்து மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu