விருத்தாசலத்தில் மோடி உருவ படத்தை எரித்து விவசாயிகள் போராட்டம்

விருத்தாசலத்தில் மோடி உருவ படத்தை எரித்து விவசாயிகள்  போராட்டம்
X

விருத்தாசலத்தில் பிரதமர் மோடி உருவ படத்தை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விருத்தாசலத்தில் மோடி உருவ படத்தை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் போலீசாருடன்மோதல் ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடைவீதி நான்குமுனை சந்திப்பு பகுதியில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி உயிரிழப்புக்கு காரணமான மத்திள பா.ஜ.க. அரசை கண்டித்து,பிரதமர் மோடி,உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மற்றும் மத்திய இணை அமைச்சர் உள்ளிட்டோரின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம்,தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare