இடிக்கப்பட்ட பேருந்து நிழற்கூடங்களை மீண்டும் அமைத்து தரக்கோரி போராட்டம்

இடிக்கப்பட்ட பேருந்து நிழற்கூடங்களை மீண்டும் அமைத்து தரக்கோரி போராட்டம்
X

இடிக்கப்பட்ட பேருந்து நிழற்கூடங்களை மீண்டும் அமைத்து தரக்கோரி தர்ணா

விருத்தாசலத்தில் சாலை விரிவாக்க பணியின்போது இடிக்கப்பட்ட பேருந்து நிழற்கூடங்களை மீண்டும் அமைத்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தர்ணா

விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையை அகலப்படுத்தும் பணியின்போது இடிக்கப்பட்ட கோ.பொன்னேரி, மும்முடி சோழன், கத்தாழை, கரைமேடு ஆகிய கிராமங்களில் இருந்த பயணிகள் நிழற்குடையை கட்டித் தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர், கிளை செயலாளர்கள், வட்ட தலைவர் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!