விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் 7-வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் 7-வது வார்டு  இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி
X

வெற்றி பெற்ற  சாந்தி மதியழகனுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் இடை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் 7வது வார்டு (முகாசபரூர், சின்னபருர், கோனான்குப்பம், எம் புதூர்) உள்ளடக்கிய கிராமங்களின் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது .

இதில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சாந்தி மதியழகன் 2325 வாக்குகள் பெற்று,அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வி கணேசனை தோற்கடித்து, 483 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பின்பு, தேர்தல் அலுவலர் வெற்றி சான்றிதழை சாந்தி மதியழகனிடம் வழங்கினார்.


இதனை தொடர்ந்து தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.பிறகு,வெற்றி பெற்ற ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி மதியழகன் விருத்தாசலம் கடலூர் செல்லும் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!