விருத்தாசலம்: தேசிய பணமாக்க திட்டத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: தேசிய பணமாக்க திட்டத்தை எதிர்த்து  மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
X

தேசிய பணமாக்கும் திட்டத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் சார்பில் தேசிய பணமாக்க திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்

விருதாச்சலம் பாலக்கரையில் தேசிய பணமாக்கும் திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் பொதுப்பணி துறை நிறுவனங்களை அழிப்பதாகவும்,நெடுஞ்சாலை,மின்சாரம்,ரயில்வே,விமான நிலையம், துறைமுகம், நிலக்கரி, கனிமவளம் உள்ளிட்ட அனைத்தையும் பெருநிறுவனங்களுக்கு வழங்கக்கூடாது,பெருநிறுவனங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கோஷங்கள் இட்டனர்,

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் வட்டார செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் ராமர், தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி நிறுவனர் தயா பேரின்பன், மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ராமலிங்கம், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டிபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ராஜேந்திரன், தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!