கடலூர் மாவட்டத்தில் இதுவரை 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கொரோனா தடுப்பூசி மாபெரும் முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியன் பார்வையிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக கலெக்டர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் ஐந்தாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது,இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.

பின்னர் கருவேப்பிலங்குறிச்சி,விருத்தாசலம் நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் 20 லட்சத்து 80 ஆயிரம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இதுவரை 15 லட்சம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் நூறு சதவீதம் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும். மேலும் கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை 260 கிராம ஊராட்சிகளில் ௧௦௦ சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றாளர்கள் எண்ணிக்கை 100 க்கும் கீழ் குறைந்துள்ளது.

மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளதாக தெரிகிறது. டெங்கு பரவாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் டெங்கு பணியாளர்கள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story