வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜீவா மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜீவா மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மணல் ஆர்ப்பாட்டம் செய்தனர்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். மணவாளநல்லூர் பகுதிகளில் மணல் குவாரி அமைத்தல், மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்தல், குவாரிகளில் இயந்திரங்களை பயன்படுத்தி மணல் எடுக்க தடை விதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்டத்தலைவர் அறிவழகி, ஏஐடியுசி கௌரவத் தலைவர் விஜய பாண்டியன்,சிபிஐ வட்ட செயலாளர் ராவணராஜன்,மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!