விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
X

விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புதிய நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புதிய நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மேற்கு மாவட்டத்தில் புதியதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதனை கொண்டாடும் வகையில் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா, பூதாம்பூர் சாலை,ஜங்ஷன் சாலை,உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் அய்யாசாமி,துணைத் தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட பொதுச்செயலாளர் அன்ன பிரகாஷ், மாவட்ட பொருளாளர் பாக்கியராஜ் மாவட்ட இளைஞரணி அகிலாண்டேஸ்வரன் ,தொகுதி தலைவர் லட்சுமணன் மற்றும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்செல்வன், ஒருங்கிணைந்த மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன் மற்றும் பிச்சைமுத்து, பாஸ்கரன் ராஜேந்திரன், மருதையன் ,மதிவாணன், அஜித் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!