3 வேளாண் சட்டம் வாபஸ்: விருத்தாசலத்தில் அனைத்து கட்சியினர் கொண்டாட்டம்

3 வேளாண் சட்டம் வாபஸ்: விருத்தாசலத்தில் அனைத்து கட்சியினர் கொண்டாட்டம்
X

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என மத்திய அரசு அறிவித்ததால் விருத்தாசலத்தில் அனைத்து கட்சி சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் என மத்திய அரசு அறிவித்த நிலையில் விருத்தாசலத்தில் அனைத்து கட்சியினர் இனிப்பு வழங்கினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் டெல்லியில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 100 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தற்பொழுது விவசாயிகள் தங்கள் போராட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்,போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில்,இந்த மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைப்படி 3 வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும் என அறிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில் விருத்தாசலம் பாலக்கரையில் தி.மு.க,காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி,ம.தி.மு.க,இந்திய முஸ்லிம் லீக்,மனிதநேய மக்கள் கட்சி,தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்