/* */

கூட்டுதல், பாத்திரம் தேய்தல்... பள்ளியில் பிஞ்சு குழந்தைகளுக்கு கொடுமை

திட்டக்குடி அருகே பள்ளியை கூட்டி சுத்தம் செய்தல், தட்டு கழுவுதல் போன்ற பணியில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது.

HIGHLIGHTS

கூட்டுதல், பாத்திரம் தேய்தல்... பள்ளியில் பிஞ்சு குழந்தைகளுக்கு கொடுமை
X

திட்டக்குடி அருகே நெய்வாசல்ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,  கூட்டி சுத்தம் செய்தல்,  தட்டுகள் கழுவுதல் போன்ற பணிகள் செய்யும் குழந்தைகள்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, நெய்வாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இங்கு, 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியரும், 2 இடைநிலை ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளியில், துப்புரவுப்பணி செய்யும் பணியாளர் இருந்தும், பள்ளி மாணவ மாணவிகளை நாளொன்றுக்கு 4 பேர் விதமாக பள்ளியை கூட்டி சுத்தம் செய்தல், தட்டுகள் கழுவுதல் போன்ற வேலைகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்துகின்றனர். இங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர், பள்ளிக்கு பணிக்கு வருவதில்லை என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

பிஞ்சு பள்ளி குழந்தைகளை, பாத்திரம் தேய்த்தல், கூட்டுதல் போன்ற கடுமையான வேலைகளில் ஈடுபத்தும் பள்ளி நிர்வாகம் மீது மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 17 Dec 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...