அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய பண்ருட்டி அரசு பள்ளி மாணவர்கள்

அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய பண்ருட்டி அரசு பள்ளி மாணவர்கள்
X

மாணவர்கள் சார்பில் அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய காட்சி.

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரசு அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் படை சார்பில் அரசு அலுவலர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் கொரோனா பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. திருவதிகை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலய வீதி, பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு, சட்டம் ஒழுங்கு, மகளிர் மற்றும் போக்குவரத்துக் காவல் நிலையங்களுக்கும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா செய்திருந்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்