நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலையில் விபத்து; ஒருவர் பலி

நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலையில் விபத்து; ஒருவர் பலி
X

விபத்தில் மரணமடைந்த ஊழியர் ரவி

நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி தனியார் சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் பணிபுரிந்து வந்த நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு விபத்தினால் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சக ஊழியர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் ரவி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!