/* */

நெல்லிக்குப்பம் பகுதியில் நீராவி பிடிக்கும் கருவி வழங்கிய அன்னை தெரசா பொறியியல் கல்லூரி நிறுவனர்

நெல்லிக்குப்பம் பகுதியில் ஆயிரம் பேருக்கு நீராவி பிடிக்கும் கருவியை அன்னை தெரசா பொறியியல் கல்லூரி நிறுவனர் வழங்கினார்.

HIGHLIGHTS

நெல்லிக்குப்பம் பகுதியில் நீராவி பிடிக்கும் கருவி வழங்கிய அன்னை தெரசா பொறியியல் கல்லூரி நிறுவனர்
X

அன்னை தெரசா பொறியியல் கல்லூரியின் நிறுவனர் பிரகாஷ் தினேஷ்குமார் சோரடியா அவர்கள் நெல்லிக்குப்பத்தில் நீராவி பிடிக்கும் மெஷினை வழங்கினார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில் பொதுமக்களுக்கு சளித் தொல்லையிலிருந்து விடுபட ஆவி பிடித்தால் இந்த நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

அன்னை தெரசா பொறியியல் கல்லூரியின் நிறுவனர் பிரகாஷ் தினேஷ்குமார் சோரடியா அவர்கள் நெல்லிக்குப்பத்தில் நேற்று முன்தினம் 5 செல் நம்பர்களை வழங்கி, புக்கிங் செய்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நீராவி பிடிக்கும் மிஷின் வழங்கப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி இன்று சமூக இடைவெளியை பின்பற்றி ஐந்து இடங்களில் இந்த இயந்திரத்தை வழங்கினார்கள். பொதுமக்களும் மகிழ்ச்சியோடு அதை பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி கூறி சென்றனர்.

Updated On: 23 May 2021 6:57 AM GMT

Related News