காதலிக்க மிரட்டி விஷம் கொடுப்பு; பண்ருட்டி அருகே சிறுமி பரிதாப உயிரிழப்பு

காதலிக்க மிரட்டி விஷம் கொடுப்பு; பண்ருட்டி அருகே சிறுமி பரிதாப உயிரிழப்பு
X

கைது செய்யப்பட்ட பாண்டியன்.

சிறுமிக்கு விஷம் கொடுத்த பாண்டியனை கைது செய்த பண்ருட்டி போலீசார் சிறையில் அடைந்தனர் .

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சின்ன பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் என்பவரின் மகன் பாண்டியன் (வயது 19 ). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறியும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் கடந்த சில மாதங்களுக்கு முன்புவற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்த நிலையில், பண்ருட்டி மகளிர் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் பாண்டியனை கைது செய்தனர்.

இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த பாண்டியன் மீண்டும் அதே சிறுமியிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டி பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி அன்று சிறுமியை நேரில் சந்தித்த பாண்டியன், நீ இல்லை எனில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் எனவும், இல்லையெனில் நீ விஷம் குடித்து இறந்த போ எனக் கூறி அந்த விஷத்தை சிறுமியிடம் கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் தாங்காமல் மனமுடைந்த சிறுமி, அந்த விஷத்தை குடித்துள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வள்ளி, சிறுமிக்கு விஷம் கொடுத்த பாண்டியன் மீது கொலை முயற்சி மற்றும் பாலியல் தொந்தரவு என போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையி்ல் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலன்யின்றி அந்த சிறுமி உயிர் இழந்தார். இதனைத்தொடர்ந்து, நேற்று பாண்டியனை கைது செய்து பண்ருட்டி போலீசார் சிறையில் அடைந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்