பண்ருட்டி அருகே குடிபோதையில் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் கைது

பண்ருட்டி அருகே குடிபோதையில் தம்பியை குத்திக் கொலை செய்த  அண்ணன் கைது
X

முத்தாண்டிகுப்பம் சேர்ந்தவர் தனசேகர்

மது போதையில் தகராறு செய்த தம்பியை கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் சேர்ந்தவர் தனசேகர் பால் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோருடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் இவரது தம்பி நீலமேகம் குடித்துவிட்டு அடிக்கடி கடன் பெற்று தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.

நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த நீலமேகம் பெற்றோர்களிடம் மற்றும் அண்ணன் தனசேகரிடமும் சண்டையிட்டு உள்ளார் இந்நிலையில் குடிபோதையால் ஆத்திரமடைந்த தனசேகர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நீல மேகத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நீலமேகம் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் ஹபிபுல்லா மற்றும் முத்தாண்டி குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தம்பியை சரமாரியாக குத்தி கொன்ற அண்ணனின் செயல் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா