பண்ருட்டி அருகே பேருந்தில் இறங்கும்போது தவறி விழுந்து சிறுவன் பலி

பண்ருட்டி அருகே பேருந்தில் இறங்கும்போது தவறி விழுந்து சிறுவன் பலி
X
அரசுப் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட மாணவர் கீழே விழுந்து பலியானான்; இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரிசி பக்கிரி பாளையம் என்ற கிராமத்தில் அரபி மதரஸா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் சாவடியை சேர்ந்த முகமது அப்பாஸ்(11) இவர் அரபி பயின்று வருகிறார். நேற்று வழக்கம்போல் கடலூரில் இருந்து அரசு பேருந்தில் பயணம் செய்தபோது முகமது அப்பாஸ் பள்ளிக்கு வரும் பொழுது பேருந்து பக்கிரிபாளையம் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாணவர், பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்தபோது தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த கிராம மக்கள் மற்றும் தகவல் அறிந்து வந்த உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டுனரை கைது செய்ய வேண்டும், மாணவனின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது