குறிஞ்சிப்பாடியில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட துவக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் 154 பயனாளிகளுக்கு 1 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது
ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் முதல் நாளே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றப்பட்டது அதற்கேற்றார்போல் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக மற்றும் மகளிர் துறை, ஆகிய துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் 154 பயனாளிகளுக்கு 1 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் வேற எந்த மாவட்டத்தில் இல்லாத அளவுக்கு இரண்டு அமைச்சர்கள் இங்கு உள்ளனர் பொதுமக்களாகிய நீங்கள் காலையில் இருந்து நிறைய மனுக்கள் அளித்துள்ளீர்கள். திமுக ஆட்சியில் முதல்வர் உங்கள் மனுக்களை பரிசீலனை செய்து அதற்கான தீர்வு காண்பார். இந்த மனுக்களை தனியாக ஒரு துறை அமைத்து அதற்கு தீர்வு செய்து வருகிறார் தேர்தல் முன்பு இந்த கடலூர் மாவட்டத்தில் கொடுத்த மனுக்கள் 50 ஆயிரத்து 756 மனுக்கள் அதில் 9 ஆயிரம் மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது
அதேபோல் இந்த மனுக்களுக்கும் தீர்வு காணப்படும் என்று இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அமைச்சர் மா சுப்பிரமணியம், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu