வடலூரில் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல் - வட்டாட்சியர் அதிரடி

வடலூரில் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல் -  வட்டாட்சியர் அதிரடி
X
வடலூரில், குட்கா, புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கும் வட்டாட்சியர் சீல் வைத்தார்.

கடலூர் மாவட்டம், வடலூர் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும், ராஜேஷ் என்பவரது கடையில், அரசு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து, வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், வடலூர் காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையில், குட்கா விற்கப்பட்ட கடையில் சோதனை செய்தனர். அப்போது புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், பண்ருட்டி சாலை இயங்கி வரும் ஒரு கடையிலும், குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பேரில் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இன்று, கடைக்களுக்கு குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சையத் அபுதாஹிர் சீல் வைத்தார். வடலூர் ஆய்வாளர் க.வீரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story