கடலூர் மாவட்டத்தில் "மக்களை தேடி மருத்துவம்" திட்டம் தொடக்கம்
கடலூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்
கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார் கோயில் வட்டம் போவூர் கிராமத்தில் "மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தினை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்லம், அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் வட்டாரத்தில் கண்டறியப்பட்டுள்ள 9344 நிரிழிவு நோய் மற்றும் இரத்த கொதிப்பு நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று இரண்டு மாதத்திற்கான மருந்து பெட்டகம் வீடு தேடிச்சென்று வழங்கப்படும் என தெரிவித்தனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 90,098 நீரிழிவு நோய் மற்றும் இரத்த கொதிப்பு நோய் உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு பயன்பெற உள்ளனர்.
செவிலியர்கள், இயன்முறை மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்), மகளிர் திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட சுகாதார பெண் ஆர்வர்கள் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுவீடாக சென்று தொற்று கண்டறிதல், தொற்று நோய்களுக்கான மருந்து, மாத்திரைகள் வீட்டிற்கே சென்று வழங்குதல், நோய் தன்மை அறிந்து மருத்துவமனைக்கு செல்ல இயலாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு டயாலிசிஸ் பேக் வழங்குதல் போன்ற மருத்துவ பணிகளை செய்யும் விதமாக அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே சென்று மருந்து வழங்கும் செவிலியர், இயன்முறை சிகிச்சையாளருக்கான வாகனத்தை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
"மக்களை தேடி. மருத்துவம்" திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக 65 வயதுடைய நீரிழிவு நோயாளியின் இல்லத்திற்கு சென்று மருந்து பெட்டகம் வழங்கியும், மற்றொரு 85 வயதுடைய ஆண் நோயாளி இல்லத்திற்கு சென்று அவருக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை பார்வையிட்டு தேவையான மருந்து பெட்டகத்தினை வழங்கினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu