குறுவைக்கு பயிர் காப்பீடு கேட்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி: அமைச்சர் பன்னீர்செல்வம்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பன்னீர்செல்வம்
தமிழகத்தில் முதன் முறையாக வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கடலூர் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் வேளாண்துறையில் ஓர் புரட்சி செய்துள்ளார். இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக தமிழகத்தில் உழவர் நலத்துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் வாயிலாக விவசாயிகளுக்கு லாபம் பெறும் பல திட்டங்களை அறிவித்துள்ளோம். இதனை அனைவரும் எந்த பாகுபாடுமின்றி வரவேற்றுள்ளனர்.
தற்போது தமிழகத்தில் 650க்கும் மேற்பபட்ட நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுள்ளது, அதுமட்டுமின்றி இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 350 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு என கட்டவேண்டிய காப்பீடு தொகையை 31ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும். ஆனால் கட்ட முடியாத சூழ்நிலை, 10 ,20 நாட்களில் குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி துவங்கிவிடும். எனவே இந்த நிலையில் குறுவைக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும் கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகும்.
எனவே தேவையில்லாமல் உன்மை நிலை அறியாமல் அறிக்கைகள் வெளியிட வேண்டாம் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லை என்றாலும், பேரிடர் நிவாரண நிதியில் இழப்பீடு பெறலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். கூட்டுறவு சங்க தலைவர்களில் அதிமுகவினர் உள்ளதால் ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கப்படவில்லை என்று கூறி வருகின்றனர. இதுமட்டுமின்றி கரும்புக்கென வழங்கவேண்டிய கரும்பு நிலுவைத்தொகை 180 கோடியினை தமிழக அரசு வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu