பள்ளிகள் திறப்பு: பள்ளி வாகனங்களை இயக்குவது குறித்து ஆலோசனை

பள்ளிகள் திறப்பு: பள்ளி வாகனங்களை இயக்குவது குறித்து ஆலோசனை
X

பள்ளி வாகனங்கள் இயக்கம் தொடர்பாக கடலூர் கேப்பர் மலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓ-முக்கண்ணன் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பள்ளிகள் திறப்புக்காக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

கடலூர், கேப்பர்மலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளிகளுக்கு வாகனங்களை இயக்குவது குறித்து, ஆர்டிஓ அலுவலகத்தில் முக்கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கடலூர் ஆய்வாளர் நல்லதம்பி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி வாகனங்களில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் போது, கடைப்பிடிக்க வேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் குறித்து, பள்ளி உரிமையாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள் ஆகியோரிடம் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா அரசு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் வலியுறுத்தினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!