தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க செல்ல தயாராகும் பரங்கிப்பேட்டை மீனவர்கள்
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14 வரை, 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வருகிறது. தற்போது இந்த தடைகாலமானது இன்றுடன் முடிவடைவதால், மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை, சீரமைப்பு பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அன்னங்கோவில் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.
நாளை அதிகாலை முதல் இவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால், அன்னங்கோவில் மீன்பிடி தளம் மீண்டும் பரபரப்புடன் இருக்கும். மேலும் சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் வரத்தும் அதிகரிக்கும்.
இதற்கிடையே மீன்வளத்துறை அதிகாரிகள், மீன்பிடி தளங்களில் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளான தனிமனித இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu