ஆறாயிரம் கோடி ரூபாய் பட்டாசு விற்க காரணம்?

ஆறாயிரம் கோடி ரூபாய்  பட்டாசு விற்க காரணம்?
X

சிவகாசி பட்டாசு-கோப்பு படம் 

முன் எப்போதும் இல்லாத வகையில் சிவகாசி பட்டாசு விற்பனை ஆறாயிரம் கோடியை எட்டியிருப்பது மகிழ்ச்சி.

ஆறாயிரம் கோடி பட்டாசு விற்பனை என்பது பட்டாசு தொழிலில் மாபெரும் புரட்சி. இதில் இரண்டு விஷயம் உள்ளது. ஒன்று மக்களின் அதீத கொண்டாட்ட மனநிலை. இரண்டு, சீன பட்டாசுகளின் விற்பனை மார்க்கெட்டில் அடியோடு தடை செய்யப்பட்டது.

முன்பெல்லாம் தீபாவளிக்கு அடுத்த நாள் செய்தித் தாளில் ஆங்காங்கே பட்டாசு தவறுதலாக வெடித்து பலி, காயம் என சிறு குறு செய்திகள் நிறைய காணக் கிடக்கும். பல ஊர்களில் இன்னும் கூட பட்டாசு வெடித்ததால் வாழ்நாள் வடுக்களோடு உலா வரும் பலர் உள்ளனர்.

இப்போது அவ்வாறான செய்திகள் மிகவும் அரிது. இதற்கு முழு காரணம் பாஜக அரசு சீன பட்டாசுகளின் வரவை முழுமையாக தடை செய்தது. இதனால் தரமற்ற மலிவு விலை பட்டாசுகள் புழக்கத்தில் இல்லை. தரமான நம் சிவகாசி பட்டாசுகளால் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரிக்கும் போது, விற்பனை, ஜிஎஸ்டி என்று மிகப்பெரிய பொருளாதார சுழற்சி நிகழும். இத்தனை நாளும் இந்த சிவகாசி எங்கேயும் போய் விட வில்லை. இங்கேயேதான் இருந்து கொண்டிருக்கிறது. பட்டாசு உற்பத்தியும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் சரியான முறையில் தொழிலை விரிவாக்கம் செய்யவும் உற்பத்தியை பெருக்கவும், ஏற்றுமதிக்கு வழிகாட்டவும் சரியான முறையில் வழி நடத்த இதுவரை இருந்த எந்த அரசும் முயற்சி செய்யவில்லை. இப்போது ஒரே நாளில் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் விற்க முழுக்க முழுக்க மோடி அரசே காரணம். விற்கப்பட்ட ஆறாயிரம் கோடி பட்டாசும் தமிழகத்தில் மட்டுமே விற்கப்பட்டது அல்ல.

உலகமெங்கும் தீபாவளி கொண்டாடிய பாரத மக்கள் அனைவருக்கும் சிவகாசி பட்டாசு போய் சேரும் வகையில் விற்பனை வழிமுறைகள் உருவாக்கப்பட்டதே காரணம். இது மிகப்பெரிய தொழில் புரட்சி. அதை சத்தம் இல்லாமல் செய்துள்ளது மோடி அரசு.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு