/* */

தமிழகத்திற்கு மேலும் 3,21,300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி : புனேவிலிருந்து இன்று பிற்பகல் விமானத்தில் வந்தது

தமிழகத்திற்கு மேலும் 3,21,300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி, புனேவிலிருந்து இன்று பிற்பகல் விமானத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

HIGHLIGHTS

தமிழகத்திற்கு மேலும் 3,21,300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி : புனேவிலிருந்து இன்று பிற்பகல் விமானத்தில் வந்தது
X

சென்னை விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி.

தமிழகத்திற்கு மேலும் 3,21,300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 27 பாா்சல்களில் புனேவிலிருந்து இன்று பிற்பகல் விமானத்தில் சென்னைக்கு வந்து சோ்ந்தன.

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.பொதுமக்களும் ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா். இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.எனவே தமிழ்நாடு அரசு,ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் புனேவிலிருந்து இன்று பிற்பகல் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 3,21,300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 27 பாா்சல்களில் சென்னை பழைய விமானநிலையம் வந்தடைந்தன.

சென்னை விமானநிலைய லோடா்கள் அந்த தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா். அதன்பின்பு தடுப்பூசி பாா்சல்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் சென்னை விமானநிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனா்.அவா்கள் குளிா்சாதன வாகனத்தில் தடுப்பூசி பாா்சல்களை ஏற்றி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் எடுத்து சென்றனா்.அங்கிருந்து தமிழகம் முழுவதும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதே விமானத்தில் மேலும் 4 பாா்சல்களில் 48 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்தன.அவைகள் சென்னையில் உள்ள சில தனியாா் மருத்துவமனைக்காக வந்துள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On: 24 Jun 2021 11:12 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது