அவசரம் இல்லாதோருக்கும் ரெம்டெசிவிர் பரிந்துரை : அமைச்சர் வேதனை

அவசரம் இல்லாதோருக்கும் ரெம்டெசிவிர் பரிந்துரை : அமைச்சர் வேதனை
X

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அவசியம் ஏற்படாதோருக்கும் ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனைகள் பரிந்துரை செய்கின்றனர் என்று அமைச்சர் வேதனை தெரிவித்தார்.

தேவை இல்லாதோருக்கும் ரெம்டெசிவிர் பரிந்துரைத்து தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு தொல்லை கொடுக்கின்றன. ரெம்டெசிவிர் மட்டுமே உயிர்காக்கும் மருந்து என்ற நம்பிக்கையால் மருந்துவாங்க கூட்டம் கூட்டமாக வந்து மக்களும் அரசுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள நியாய விலைக் கடையில் தமிழக அரசின் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக 2000 ரூபாயை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் 7000 தொகுப்புகள் போதுமானதாக இல்லை என குற்றம் சாட்டினார். அதேபோல் தனியார் மருத்துவமனைகள் எதன் அடிப்படையில் தொற்றாளர்களுக்கு ரெம்டெசிவிர் பரிந்துரைக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், அவசர தேவை இல்லாதவர்களுக்கும் ரெம்டெசிவிர் பரிந்துரைத்து தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு தொல்லை கொடுப்பதாகவும், ரெம்டெசிவிர் மருந்து மட்டுமே உயிர்காக்கும் மருந்து என்ற நம்பிக்கையால் அதை வாங்க கூட்டம் கூட்டமாக வந்து மக்களும் அரசுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்தார்.

கீழ்பாக்கம் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ரெம்டெசிவிர் விற்பனையை நேற்று உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றிய நிலையில் அங்கும் மக்கள் கூட்டம் குறையவில்லை என்றார். விரைவில் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை குறித்து ஆராய குழு அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் தமிழகத்தில் படுக்கை பற்றாகுறை தொடர்ந்து நீடிக்கும் நிலையில் முடிந்த வரை படுக்கை வசதிகளை பெருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழகத்தின் தற்போதைய ஆக்சிஜன் தேவை 470 மெட்ரிக் டன் என்ற நிலையில் உற்பத்தி 400 மெட்ரிக் டன்னாக இருப்பதாகவும் பற்றாகுறையான 70 மெட்ரிக் டன் பெறுவதற்கு பல்வேறு மாநிலங்களிடம் பேச்சுவார்த்தை நடை பெற்றுவருவதாகவும் குறிபிட்டார். தனியார் மருத்துவமனைகள் சிறிய அளவிலான ஆக்சிஜன் உற்பத்தி கலன்களை அமைக்க முயற்சிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர், கேரளா போன்று ஆக்சிஜன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட பழுது நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தெரிவித்த அவர் விரைவில் உற்பத்தி தொடங்கப்படும் என்றார். 18 வயது நிறைவடைந்தோருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்கனவே மத்திய அரசுக்கு ரூ.46 கோடி முன்பணம் செலுத்தியிருப்பதாக கூறிய அமைச்சர் ஒரிரு நாளில் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்கும் என்றார்.

5கோடி தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம் கோரிய நிலையில் 3 மாத்திற்குள் தடுப்பூசி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!