புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவீஷீல்டு : சென்னை விமான நிலையம் வந்தது

புனேவில் இருந்து 6 லட்சம்  டோஸ் கோவீஷீல்டு : சென்னை விமான நிலையம் வந்தது
X

சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய கோவி ஷீல்டு தடுப்பூசி லாரியில் ஏற்றப்படுகிறது.

புனேவில் இருந்து 6லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையத்தில் வந்து இறக்கப்பட்டது.

புனேவில் இருந்து 6லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்படும் கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்தும் வருகிறது.

இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் 50 பார்சல்களில் 6 லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டி,எம்,எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்புக் கிடங்கிற்க்கு கொண்டு செல்லப்பட்டது.

தடுப்பூசி மருந்துகளை தட்டுப்பாடு உள்ள இடத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்க்கு 4 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!