ஒரு பஜ்ஜி 227 ரூபாயா? கொந்தளிக்கும் பொதுமக்கள்..!
சென்னை உணவகம் கொடுத்த பில்லில் விலையை பாருங்கள்.
ஒரு வாழைக்காய் பஜ்ஜிக்கு 227ரூபா போட்ருக்காங்களே இதெல்லாம் என்னடா உணவகம்? முதலில் அம்மாவின் கைப்பக்குவம், உழவன் உணவகம், மாமியார் வீட்டு சமையல், அம்மா சமையல், இது மாதிரி பாரம்பரியமான பெயரை எல்லாம் பார்த்தால் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து வண்டியை நிறுத்துங்கள்.
பில்லை போட்டு தீட்டி விடுவார்கள். அப்புறம் உங்களுக்கு காருக்கு பெட்ரோல் போட கூட காசு இருக்காது பார்த்துக்கொள்ளுங்கள். சோசியல் மீடியா வளர்ந்த பிறகு ஒரு கிஜுக்கால் வேலை போல இதை எல்லாம் செய்து வருகிறார்கள். அதாவது வசந்த பவன், ஆனந்த பவன், டைப் பெயருடைய , அந்த காலத்து விலாஸ் பெயருடைய உணவகங்கள் அல்லது சாதாரணமாக ஹோட்டல் சரவணா உயர்தர சைவ உணவகம், ஹோட்டல் மாலா உயர்தர அசைவ உணவகம் இப்படி எல்லாம் சாதாரணமாக பெயர் இருந்தால் புறக்கணிக்கிறார்கள். இதனை வைத்து இவர்கள் ஏமாற்றுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஏமாற்றுகிறார்களாமாம்.
சொல்லப்போனால் இவர்களிடம் சென்றால் ஒரு தோசைக்கு உயர்தர சைவ உணவகத்தில் என்ன விலையோ ஒரு பிரியாணிக்கு என்ன விலையோ அதைத்தான் விற்க போகிறார்கள். இப்படிலாம் சில வருடங்களுக்கு முன்பு எல்லாரும் சாப்பிட்டு கொண்டிருந்தது தான் இப்போ என்னாச்சுன்னு தெரியல....
இப்படி பாட்டி சுட்ட வடை டைப் பாரம்பரிய கடைகளுக்கு போய் ஏமாற்றப்படுகிறார்கள். இவர்கள் பாரம்பரியம் எளிமை, அந்தக்கால முறை ,என்ற பெயரில் ஏமாற்ற பார்க்கிறார்கள். அதை விட்டு கொஞ்சம் உயர்தரமான ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டாலே ஓரளவு நியாயமான பில்லை கொடுத்து விட்டு வரலாம்.
அதை விட்டு அம்மா வீடு, மாமியா வீடுன்னு போனிங்கன்னா அவன் போடுற பில்லை பார்த்து டெம்ப்ட் ஆகி டென்சனாகி கூப்பிடுறா ஓட்டல் ஓனரன்னு, கூப்பிட்டு அவனிடம் ஒரு தகராறை செய்து நீங்க டூர் போற இடத்துல சாப்பிட போய் உண்மையாவே மாமியார் வீட்டுக்கு போய் வாரத்துக்கு ஒரு முறை அங்க சிக்கன் போடுறாங்களாம் அத சாப்பிட வேண்டியது தான்.
இது போக நேற்று ஒரு நண்பர் நவீனமாக முளைக்கும் காபி , டீ கடைகளை பற்றி எழுதி இருந்தார். நம்ம மனுசப்பயபுள்ளைகளை என்ன சொல்றதுன்னு தான் தெரியல. ஹோட்டல்லாம் ஓரளவு ஹைஜீனிக்கா இருக்குற நம்ம பட்ஜெட் கட்டுப்படியாகுற ஹோட்டலை விட்டுட்டு அம்மா வீடு, மாமியா வீடு பாட்டி வீடுன்னு போறது, அதே நேரத்துல டீ குடிக்க பாரம்பரியமா நம்ம ஊர்ல ஒரு சுப்ரமணி அண்ணனோ, ராமசாமி அண்ணனோ ஒரு டீக்கடைய நடத்தி வருவாங்க வாழைக்காய நைஸா ஸ்லைஸ் பண்ணி பஜ்ஜி போட்டு தருவாங்க.
இந்த மாதிரி நீங்க டூர் போறப்பவும் ஏதாவது சுப்பிரமணி, ராமசாமி அண்ணன்களின் கூரைகடைகளையும் அந்த பஜ்ஜியையும் நீங்கள் பார்ப்பீங்க. ஆனா அங்க குடிக்குறதில்ல. அதை விட்டுட்டு கருப்பட்டி காபி கடைனு லைட்டிங் போட்டு பளபளன்னு பாரம்பரியம்ங்குற பேர்ல வச்சிருப்பான் அவன்கிட்ட போய் ஒரு காபிய குடிச்சிட்டு ஒரு பஜ்ஜிய சாப்பிட்டு ஜி.எஸ்,டியோட பில்ல கொடுத்துட்டு வர்றது.
இது போக நண்பர் ஒருவர் எழுதி இருந்தது போல, என்ன தொழில் செய்யலாம்னு முழிச்சுக்கிட்ருக்குறவன மதிமயக்கி , காபி ஹவுஸ், டீ ஹவுஸ், டீ ஸ்பாட், காபி ஸ்பாட் இப்படி ஆங்கிலத்தில் ஏதாவது பெயரை வச்சு விட்டு ஊர் ஊருக்கு அவனுக்கு டீ போடவும் பஜ்ஜி போடவும் சொல்லிக்கொடுக்குறேன்னு சொல்லி அதுக்கும் சில அமவுண்டுகளை வாங்கி எங்க பேர்ல காபி ஹவுஸ்னு வச்சிக்கங்க இயர்லி ஒன்ஸ் ரினிவல் பண்ணிக்கங்க என அட்ராசிட்டிகளை பண்ணுகிறார்கள்.
இவர்களை போன்றவர்களும் ஒரு தகர செட் போட்டு ஒரு குடில் போட்டோ அதை எவ்வளவு தூரம் (Organic) இயற்கையா அமைக்க முடியுமோ அப்படி அமைத்து, உள்ளே சென்றால் சில்வர் டம்ளர்லயோ, கண்ணாடி டம்ளர்லயோ காபி கொடுக்காம மண் குடுவையில கொடுக்குறது, அவனும் என்ன செய்வான் அவன் அந்த கம்பெனிக்கு ப்ரான்சைஸ்க்க்கு கொடுத்த காசை நம்ம தலையில கட்டணும்ல.
ஆனா நம்மாளு நான் ஏற்கனவே நான் சொன்ன மாதிரி யாராவது ஒரு பெரியவர் மேல் சட்டை கூட அணியாமல் ஃபேர் பாடியோட நின்னு டீ, போட்டுக்கொண்டு, மொறு மொறுன்னு வடை போட்டுக்கொண்டிருப்பார் அவர்களிடம் செல்லாமல் ஹைஜீனிக் உயர்தரம் என்று இப்படி பாட்டி வீடு உணவகம் மாதிரி கொண்டு போய் காசை இழந்து விட்டு வருவது.
அப்புறம் பாட்டினா என்னனு அர்த்தத்தை புரிஞ்சுக்கங்க. அம்மாவை பெற்ற பாட்டியோ அப்பாவை பெற்ற பாட்டியோ நம்மள மாதிரி பேரன் பேத்திகள் மீது அன்பாதான் இருப்பாங்க. இதுல அப்பாவை பெற்ற பாட்டி வருடம் முழுவதும் ஒரே வீட்டில் நம்மை பார்த்துக்கொண்டே இருப்பாங்க.
அம்மாவை பெற்ற பாட்டி அதாவது அம்மாச்சி, அம்மாயி, அம்மம்மா, ஆச்சி, அம்மத்தா இப்படி பல ஊர்களில் அம்மாவை பெற்ற பாட்டியை வேறு வேறு பெயர்களில் அழைப்பார்கள். இவர்கள் எப்போதாவது பெற்ற மகள் ஏதாவது பரிட்சை லீவுக்கோ, திருவிழாவுக்கோ தன் வீட்டுக்கு பேரன் பேத்திகளை அழைத்து வரும் போது அப்படியே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி விடுவார்கள்.
மகள் மற்றும் பேரன் பேத்திகளுக்கு லீவு முடிந்து போகும் வரை, வடை என்ன ,பஜ்ஜி என்ன, முறுக்கு என்ன, பூரி என்ன,கறி மீன் என்ன என பேரன் பேத்திகளை நன்கு கவனித்து அனுப்புவார்கள். இது 80ஸ் 90ஸ் கிட்ஸ் பாட்டி வீட்டுக்கு போனவர்களுக்கு தெரியும். இப்போ உள்ள பாட்டிகளும் செல்போனில் மூழ்க தொடங்கி விட்டதால் இப்போதைய கிட்ஸ்கள் இது போல உபசரிப்புகளை பாட்டிகளிடம் அதிகம் அனுபவித்திருப்பார்களோ தெரியாது.
முதலில் 2கே கிட்ஸ்லாம் லீவுக்கு பாட்டி வீட்டுக்கு போவாங்களான்னா அதுவும் கிடையாது. இப்படி உன்னதமான பாட்டியின் அன்பை ஒரு பஜ்ஜிக்கு 227 ரூபாய் போட்டதன் மூலம் கொச்சைப்படுத்தி விட்டது அந்த உணவகம். முதல்ல பெயரை மாத்துங்கப்பா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu