ஆற்காடு வீராசாமி குறித்த சர்ச்சை பேச்சு: அண்ணாமலை வருத்தம் தெரிவிப்பு
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக அவர் பேசியது சர்ச்சையானது.
இந்த சம்பவத்திற்கு ஆற்காடு வீராசாமியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வீராசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேடையில் அபத்தமாக பேசுகிறார். அதை விட அபத்தம் என்னவென்றால் அவருக்கு மேடையளிப்பது தான்.
எனது தந்தை (ஆற்காட்டார்) அவரது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்திருந்தார். எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா. ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று தவறான கருத்தை கூறியதற்கு மிக வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். எனது தந்தை நலமாக உள்ளார். நாகரீகமற்ற முறையில் உளறுவதை அவர் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் எதிர்வினை இது போன்று சாதாரணமாக இருக்காது என்று எச்சரிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆற்காடு வீராசாமி குறித்த தவறான கருத்து... வருத்தம் தெரிவித்த அண்ணாமலை:
இந்நிலையில் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக கூறியதற்கு பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/annamalai_k/status/1535305916244905985?s=20
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu