ரூ.28,664 கோடியில் ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியது

ரூ.28,664 கோடியில் ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியது
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

₹28,664 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க வாய்ப்பு- 82,400 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள்..

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத் திர ஓட்டலில் நேற்று ( செவ்வாய்க்கிழமை ) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் முக்கிய பிரமுகர்கள் பல்வேறு தொழில் குழுமங்களைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் முதன்மை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் நாட்டின் தொழில் வளத்தை மேம்படுத்தவும், வேலை இல்லா திண்டாட் டத்தை குறைக்கவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பல்வேறு நட வடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவரும் நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பல்வேறு தொழில் குழுமங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள, மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. இதன் அடிப்ப டையில் முதல்கட்டமாக 47 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னி லையில் இன்று ரூ.28,664 கோடி மதிப்பிலான,47 தொழில் நுட்பங்கள் கையெழுத்தாகியது. இதன் மூலம் 82,400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஒப்பந்தங்கள் ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் சார்ந்தவை. குறிப்பாக கேபிட்டல் லாண்ட், அதானி, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.28,664 கோடி ஆகும். இந்த புதிய திட்டங்கள் மூலம், 82,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது :

புதிய திட்டங்கள் மேலும், தைவான் நாட்டைசேர்ந்த லோட்டஸ் புட்வேர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது. இந்த நிறுவனம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தொழிற்சாலை அமைக்கும். அதுமட்டுமல்லாமல் பர்கூரில் உள்ள தொழிற்சாலையை விரிவுபடுத்தும் என்றும், பல்வேறு திட்டங் களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதுடன், சில திட்டங்களை தொடங்கி வைத்தார். தொழில் வளத்தை மேம்படுத்த மேலும் பல ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் செய்து கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Tags

Next Story