நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை கூட்டம்
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் ஆயத்தப் பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் முனைவர் வெ.பழனிகுமார், (ஓய்வு), தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது.

விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களின் மண்டல அளவிலான இந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சியும் இன்று (02.11.2021) ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!