கடலில் பேனா சின்னம்: நிபந்தனைகள் என்ன?

கடலில் பேனா சின்னம்: நிபந்தனைகள் என்ன?
X
கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சிலை அமையும் பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்துக்கு கடந்த ஜூன் 20ஆம் தேதி சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும் பொதுப்பணித் துறை பெற்றது.

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதிக்காக தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று கருணாநிதியின் நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதைத்தொடர்ந்து கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • மெரீனாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் இடத்துக்கு அருகிலேயே ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளம் இருப்பதால், அவா்களிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
  • நினைவுச் சின்னம் கட்டப்படும்போது கடலோர நிபுணா் குழுவினா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • நிலத்தடி நீரைப் பயன்படுத்தி நினைவுச் சின்னத்தை எழுப்பக் கூடாது.
  • நினைவுச் சின்னம் தொடா்பாக நீதிமன்றங்கள் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • கடலோரப் பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் காலத்தில் நினைவுச் சின்னத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.
  • நினைவுச் சின்னத்துக்கு சரியான சாலை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • காண வரும் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
  • போக்குவரத்து திட்டம் மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுதல் ஆகியவற்றுக்கான திட்டமிடுதல்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.
  • பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மீறப்பட்டால், திட்ட அனுமதி திரும்பப் பெறப்படும்

என்பது உள்பட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே நினைவுச்சின்னம் அமைக்க முடியும்.

Tags

Next Story