பாகிஸ்தான் மீதும் கடும் நடவடிக்கை : இந்து வெள்ளாளர் பேரவை கோரிக்கை..!
பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் உருக்குலைந்து கிடக்கும் பேருந்து.
இந்து வெள்ளாளர் பேரவை பெயரில் சமூக வலைளதங்களில் வெளியான அறிக்கை:
காஷ்மீரில் கோயிலுக்கு சென்ற இந்துக்கள் மீது இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்துள்ளது. இதில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனம்னு கத்துபவர்கள் இப்போது வாய் திறக்க மாட்டார்கள். காஷ்மீரில் இரு தினங்களுக்கு முன் இந்து பக்தர்கள் சென்ற வாகனம் தாக்கப்பட்டு ஏழுபேர் பலியான துயரத்தின் பதிலடியாக மிகபெரும் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபட்டுள்ளன.
காஷ்மீர் மாகாணம் வளர்ச்சியை நோக்கி திரும்புவதை விரும்பாமல், அங்கு இந்து ஆலயங்கள் மீண்டு உருவாகி வருவதை பொறுக்காத அந்நிய நாட்டு சதிகார கும்பல் இந்த கொடூரத்தை செய்திருக்கின்றது. இறந்த பக்தர்களில் சிறுவனும் உண்டு.
இந்த தாக்குதலால் அங்கு செல்லும் இந்து பக்தர்களை மிரட்டலாம். காஷ்மீர் அமைதியாக இல்லை எனும் தோற்றத்தை உருவாக்கி அதனால் அந்நிய முதலீடுகள் வராமல் செய்யலாம் எனும் சதிகார கும்பலின் எண்ணம் ஈடேறப்போவதே இல்லை.
இந்திய பாதுகாப்பு படைகள் முழு வீச்சில் களமிறங்கியிருக்கின்றன. தேவைபட்டால் எல்லை கடந்து தாக்கவும் ராணுவம் தயாராகின்றது. நிச்சயம் இந்த தாக்குதலுக்கு உதவியாகவும், உடந்தையாகவும் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் இந்தியா எல்லை தாண்டியும் சென்று தாக்குதல் நடத்த வேண்டும்.
மோடியின் மூன்றாம் வருகையினை பொறுக்க முடியாத தேசவிரோத சக்திகள் இப்படி தேசத்தின் அப்பாவி மக்களை கொல்வதெல்லாம் கொடூரமான மனசாட்சியற்ற மனிதமற்ற மிருகத்தனம். இந்த கொடியவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பது தொடக்க விசாரணையில் தெரிந்திருக்கின்றது.
சமீபத்தில் பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியாவின் சென்னை நகரம் மாற்று உறுப்பு பொருத்தி உயிர்காத்து அனுப்பியது. பதிலுக்கு அவர்கள் காட்டும் நன்றிக்கடன் இப்படித்தான் இருக்கின்றது. அவர்களின் மனம் அப்படி, இந்த தேசத்தின் மாபெரும் தாத்பரியம் இப்படியிருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காஷ்மீரில் இனி ஒருவரைக் கூட இழக்கமாட்டோம் எனும்படி மாபெரும் நடவடிக்கைகள் அவசியம் தேசம் அதை செய்யும். இதனிடையே மணிப்பூர் பக்கமும் சட்டீஸ்கர் பக்கமும் சில நக்சலைட் இம்சைகளின் நடமாட்டமும் சிறிய தாக்குதலும் நடப்பதை அவதானிக்க முடிகின்றது.
ஆக இந்த பிரச்னைகளில் பாகிஸ்தான், சீன நாடுகளின் பின்னணி இருப்பதும், வயிற்றெறிச்சலில் அவை தேசத்துக்கும் மோடிக்கும் எதிரான காரியங்களை செய்வதும் தெரிகின்றது. அவர்களால் அவ்வளவு தான் அவர்களால் முடியும். அதுவும் விரைவில் களையப்படும். களைய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu