உழைத்து இறந்தால் ரூ.2 லட்சம் ; குடித்து இறந்தால் ரூ.10 லட்சம்..!

உழைத்து இறந்தால் ரூ.2 லட்சம் ;  குடித்து இறந்தால் ரூ.10 லட்சம்..!

பட்டாசு ஆலை பணியாளர்கள் (கோப்பு படம்)

உழைக்கும் போது இறப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும், குடித்து இறப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்குவது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

சிவகாசியில் ஊனை உருக்கி, உடலை வருத்தி சொற்ப கூலிக்கு காலை முதல் மாலை வரை ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் கூலி தொழிலாளர்கள், சில நேரங்களில் பட்டாசுகளோடு ரத்தமும் சதையுமாக கருகி போகிறார்களே. அந்த மாதிரி உழைத்து பிழைக்கும் குடும்பத்தில் இறந்தவர்கள் யாருக்காவது அரசு 10 லட்சம் இழப்பீடு கொடுத்திருக்கிறதா?

உழைத்து பிழைக்கும் ஏழைகளை கிள்ளுக்கீரைகளாக ஒதுக்கி புறம் தள்ளும் அரசு, கொளுத்து மதத்து குடித்தே குடல் வெந்து சாகும் குடிகார குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் பணம் கொடுப்பது ஏற்புடையது தானா? உழைக்கும் ஏழைகளுக்கு மதிப்போ, அங்கீகாரமோ கிடையாதா? என ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் கொந்தளிக்கின்றனர்.

இப்போது கொடுக்கும் நிவாரண தொகை உழைத்து இறந்தவர்களுக்கு இல்லை. அவர்களின் குடும்பத்திற்கும், பெற்றோர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு என பலரும் வாதிடுகின்றனர். அந்த உண்மையை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சிவகாசியில் வெடிவிபத்தில் இறப்பவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கின்றனரே? இந்த கரிசனம் அங்கு ஏன் வருவதில்லை? என பலரும் எதிர்கேள்வி கேட்கின்றனர்.

இது மிகவும் நியாயமான கேள்வியும்கூடட. குறிப்பாக சாவித்திரி கண்ணன், ரெங்கராஜ்பாண்டே, சீமான் போன்றோர் இந்த விவரங்களை மிகவும் தெளிவாக வீடியோ, ஆடியோ, எழுத்து என பல தளங்களில் தெளிவாக பதிவிட்டுள்ளனர். சீமான் ஒருபடி மேலே போய் இப்படி வழங்கிய இலவச பணத்தை, அரசு பணத்தில் இருந்து செலவு செய்யாமல், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று சம்பாதித்தவர்களின் குடும்பத்தில் இருந்து வாங்கிக் கொடுக்க வேண்டும் என ஒரு குண்டை போட்டுள்ளார்.

இதனை தமிழக மக்கள் பலரும் வரவேற்பதைக் காண முடிகிறது. முதல்வரின் கருணை, இரக்கம், சிறந்த நிர்வாகத்தை பற்றியெல்லாம் பேசவில்லை. குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு கொடுத்த முதல்வர், விபத்தில் இறந்தவர்கள், சிவகாசி பட்டாசு தயாரிக்கும் போது, வெடித்து இறந்தவர்கள், விவசாய பணி, கட்டுமான பணிகளில் ஏற்படும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கும் இதே கருணையை காட்ட வேண்டும்.

குறிப்பாக போலீஸ் பணியில் இருக்கும் போது இறப்பவர்கள், ராணுவ பணியில் இருக்கும் போது இறப்பவர்களுக்கும் இதனை விட பல மடங்கு கூடுதல் நிவாரணம் வழங்கி, அவர்களின் குடும்பத்திற்கும் கௌரவம் வழங்க வேண்டும் என தமிழக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story